தமிழ்நாடு

நிவாரணப் பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு: ரயில்வே அமைச்சருக்கு பழனிசாமி கடிதம் 

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ரயிலில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

PTI


தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ரயிலில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் கடந்த 16ம் தேதி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. இதில் ஏராளமானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். பல ஏக்கர் கணக்கில் விவசாயப் பொருட்களும் சேதமடைந்தது.

இந்த நிலையில், கேரள வெள்ளத்தின் போது நிவாரணப் பொருட்களை ரயிலில் அனுப்ப சரக்கு கட்டணத்தை ரத்து செய்ததைப் போல, தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு, ஆட்சியர்களின் பெயரிட்டு வரும் நிவாரணப் பொருட்களுக்கான சரக்குக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT