முகப்பு
தமிழ்நாடு

பிரமோற்சவம்: திருப்பதி செல்லும் பழனி மலர்கள்

 திருப்பதியில் நடைபெறவுள்ள இரண்டாவது பிரமோற்சவத்துக்கு பழனியில் இருந்து 7 டன் மலர்கள் அனுப்பும் பணி திங்கள்

Updated On : 9 அக்டோபர் 2018, 12:47 am IST
பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் திருமலை பிரமோற்சவத்துக்காக திங்கள்கிழமை மலர்கள் அனுப்பும் பணியை தொடக்கிவைத்த சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன்.
பகிர்:


 திருப்பதியில் நடைபெறவுள்ள இரண்டாவது பிரமோற்சவத்துக்கு பழனியில் இருந்து 7 டன் மலர்கள் அனுப்பும் பணி திங்கள்
கிழமை தொடங்கியது.
திருப்பதி திருமலையில் கடந்த செப். 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் 2 ஆவது பிரமோற்சவம் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்காக பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் வண்ண மலர்கள் அனுப்பும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 
பழனி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு புஷ்ப கைங்கர்ய சபா செயலர் மருதசாமி முன்னிலை வகித்தார். பழனி சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மலர்கள் அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார். 
முதல் நாளான திங்கள்கிழமை மஞ்சள் செவ்வந்தி, ஆரஞ்சு செண்டுமல்லி, வாடாமல்லி, பட்டுப்பூ, வெள்ளை சம்பங்கி, அரளி, மருகு உள்ளிட்ட மலர்கள் சுமார் 700 கிலோ அளவிற்கு அனுப்பப்பட்டது. 
வரும் பதினோரு நாள்களும் சுமார் 7 டன் எடையிலான பட்டுப்பூ, துளசி, தாமரை என பல்வேறு வகையான மலர்கள் அனுப்பப்படவுள்ளன. 
ஏற்பாடுகளை சங்க தலைவர் ஹரிஹரமுத்து, கௌரவ தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.