தமிழ்நாடு

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசர உதவி ஆம்புலன்ஸ் எண் 108 சேவை பாதிப்பு 

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசர உதவி ஆம்புலன்ஸ் எண்  108 சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

DIN

சென்னை: தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசர உதவி ஆம்புலன்ஸ் எண்  108 சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் அவசர மருத்துவ உதவி ஆம்புலன்ஸ் சேவைக்கு என 108 எண் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த சேவையானது சென்னை தேனாப்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. 

ஒரு நாளைக்கு சராசரியாக இந்த எண்ணிற்கு 4000 அழைப்புகள் வருவது வழக்கமாகும்,. அத்துடன் தமிழகம் முழுவதும் 950 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசர உதவி ஆம்புலன்ஸ் எண்  108 சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

இந்த எண்ணுக்கான சேவையைப் பராமரித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத் தரப்பில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே, தற்போது சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்த பாதிப்பு விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பொதுமக்களின் வசதிக்காக 044- 40170100 என்ற தற்காலிக சேவை என்னும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT