தமிழ்நாடு

ஆயுத பூஜையை ஒட்டி 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு   

DIN

சென்னை: ஆயுத பூஜையை ஒட்டி புதன் இரவு முதல் 770 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி மற்றும் வார இறுதி ஆகியவற்றை முன்னிட்டு, புதன்கிழமை இரவில் இருந்து கோயம்பேட்டில் இருந்து  சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2775 பேருந்துகள் இயக்கப்படும் தருணத்தில் ,வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக, புதன் இரவு முதல் 770 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழநாடு அரசு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   

இவை ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு இயக்கப்படும் பேருந்துகள் அல்லாமல் கூடுதலாக இயக்கப்படுவது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT