தமிழ்நாடு

கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு: சு.திருநாவுக்கரசர்

DIN

கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். முதல்வரை எவ்வாறு சிபிஐ விசாரணை செய்ய முடியும்?. எனவே முதல்வர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும். 

ராகுல் காந்தியை கமல் சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக கூறியுள்ளார். கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு. அரசியலில் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர் பழைய படத்தை தற்போது தான் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT