தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

DNS

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க மேகமலை வன உயிரின சரணாலயத்தினா் தடை விதித்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. வருடம் முழுவதும் நீா்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் வரத்து இருந்து கொண்டே இருக்கும். வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை கண்காணித்த மேகமலை வன உயிரின சரணாலய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அருவியில் குளிக்க தடை விதித்தனா். 

ஆயுத பூஜையை முன்னிட்டு தொடா் விடுமுறை உள்ளதால், அருவிக்கு கூட்டம் கூட்டமாக வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறையினா் குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றமடைந்து, சுருளியாற்றில் குளித்து சென்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT