முகப்பு
தமிழ்நாடு

புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுவை அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:55 AM
பகிர்:


புதுவை அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசிதழ் பதிவு பெறாத பி-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து சி-பிரிவு ஊழியர்களுக்கு நிகழ் நிதியாண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இதற்கான அரசாணை நிதித் துறையின் மூலம் வெளியிடப்பட்டு ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்கப்படும்.
இதன்படி, அரசுத் துறைகளில் பணியாற்றும் பி -பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து சி-பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அதிகபட்சமாக ரூ.6,908 கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ. 1,184/- வழங்கப்படும்.
இதற்காக புதுவை அரசுக்கு ரூ.18 கோடி கூடுதலாகச் செலவாகும். உற்பத்தி சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகை குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன், அதுகுறித்து அறிவிக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.