தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.28 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.28 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்

DIN


சென்னை: சென்னை விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.28 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது, இரண்டு வெவ்வேறு விமானங்களில் சென்னை வந்த இரண்டு நபர்கள், தாங்கள் வைத்திருந்த மைக்ரோ ஓவன்கள்,, எலக்ட்ரிக் தட்டுகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து பறிமுதல் செய்த தங்கத்தின் மொத்த எடை 6.995 கிலோ எனவும், அதன் மதிப்பு சுமார் ரூ.2.28 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர், அவர்கள் இருவரையும் நேபாளம் அழைத்துச் சென்றதாகவும், மலேசியாவிலிருந்து நேபாளத்திற்கும், அங்கிருந்து இந்தியாவிற்கும் விமானம் மூலம் தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT