பத்தினம்புதூரில் 5 பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பத்தினம்புதூர் பகுதியில் 5 அரசுப் பேருந்துகளை வழிமறித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுபத்தினம்புதூரில் 5 பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பத்தினம்புதூர் பகுதியில் 5 அரசுப் பேருந்துகளை வழிமறித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூலூர்: பத்தினம்புதூர் பகுதியில் 5 அரசுப் பேருந்துகளை வழிமறித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட நேரங்களுக்கு பேருந்துகள் வருவதில்லை, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் கார்த்திகேயன், சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினை மீண்டும் வராது என்று உறுதி அளிக்கப்பட்டதால் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடந்த சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.