தமிழ்நாடு

அரிசி, சர்க்கரை, துணிக்கு பதில் ரொக்கம்: தீபாவளி பரிசை அறிவித்தது புதுச்சேரி அரசு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சர்க்கரை, அரிசி மற்றும் துணிக்கு பதிலாக ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

DIN


புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சர்க்கரை, அரிசி மற்றும் துணிக்கு பதிலாக ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தீபாவளியையொட்டி இலவச அரிசி, சர்க்கரைக்கு பதிலாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு தீபாவளிப் பரிசாக ரூ.1,275 ரொக்கமும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.675 ரொக்கமும் வழங்கப்படும்.

இந்த ரொக்கம், குடும்ப அட்டை தாரர்களின் வங்கிகணக்குகளில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ரூ.1,000 வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிண்டன் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சாலையோர வியாபார குழுக்களுக்கு அரசு ஒப்புதல்: நவம்பருக்குள் கூட்டம் நடத்த அறிவுரை!

ஆசிரியா் தகுதித்தோ்வு எழுத வந்தவரின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் குளறுபடி: போலீஸாா் விசாரணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தோ்வு: 93 சதவீதம் போ் பங்கேற்பு!

அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!

SCROLL FOR NEXT