தமிழ்நாடு

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்புகளில் சேர்க்கை தொடக்கம்

DIN


சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் காலணி பயிற்சி நிறுவனத்தின் பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இது குறித்து பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் முரளி திங்கள்கிழமை அளித்த பேட்டி: இந்த மத்திய அரசு பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி பட்டயப் படிப்பும் (பி.ஜி.ஹெச்.டி), காலணி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பட்டயப் படிப்பும் (டி.எப்.எம்.டி) படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இதில் முதுநிலை பட்டயப் படிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே சேர முடியும். டி.எப்.எம்.டி. பட்டயப் படிப்பில் சேர குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த படிப்புக்கான கட்டணத்துக்கு வங்கிக் கடன் வசதியும் மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு நூறு சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இந்த பட்டயப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. நிறுவனத்தில் நடைபெறும் வளாகத் தேர்வு மூலம் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மேலும், புதிதாக காலணி உற்பத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
பயிற்சி குறித்த மேல் விவரங்களை அறிய www.cftichennai.in என்ற இணையதளத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT