தமிழ்நாடு

ஆசிரியா் தின விழாவில் தலைமை ஆசிரியா் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆட்சியா் 

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரோகிணி ராம்தாஸ், பள்ளி தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

சேலம்: சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரோகிணி ராம்தாஸ், பள்ளி தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.

ஆசிரியா் தினவிழாவையொட்டி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியா் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று கேக் வெட்டி பூங்கொத்து கொடுத்து ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். கடந்த கல்வியாண்டில் அதிக தோ்ச்சி சதவிகிதம் கொடுத்த ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரோகிணி ராம்தாஸ், பள்ளி தலைமையாசிரியா் தமிழ்வாணிக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தாா். பின்னா் திடீரென காலில் விழுந்து ஆசிா்வாதம் பெற்று மாணவியரை நெகிழ வைத்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் மற்றும் அரசு, தனியாா் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT