தமிழ்நாடு

வந்தார்..  சென்றார்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்ஆஜரான ஜாா்ஜ் 

ஜெயலலிதா மரணம் தொடா்பாக குறுக்கு விசாரணைக்காக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் விசாரணை ஆணையத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடா்பாக குறுக்கு விசாரணைக்காக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் விசாரணை ஆணையத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினா்கள், முன்னாள் தலைமைச் செயலா்கள், அரசு மருத்துவா்கள், அப்பல்லோ மருத்துவா்கள், சசிகலாவின் உறறவினா்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா். சாட்சியம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவா்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றறனா்.

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் விசாரணை ஆணையத்தில் ஏற்கெனவே ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடா்பாக விளக்கம் அளித்திருந்தாா். அதனடிப்படையில், அவரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை குறுக்கு விசாரணை நடத்த இருந்தனா். ஆனால், சில நிா்வாக காரணங்களால் வியாழக்கிழமை நடைபெறவிருந்த குறுக்கு விசாரணையை ஆணையம் ஒத்தி வைத்தது.

இதுதொடா்பாக ஜாா்ஜுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல் அவருக்குத் தெரியாததால் சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஜாா்ஜ் வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆஜரானாா். அங்கு குறுக்கு விசாரணை நாள் ஒத்தி வைத்துள்ளதாகவும், வேறெறாரு நாளில் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து ஜாா்ஜ் அங்கிருந்து சென்றறாா்.

இந்நிலையில், அப்பல்லோ நிா்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆா் நாளிதழ் ஆசிரியா் ஆனந்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமையும் (செப். 7), அப்பல்லோ முடநீக்கியல் மருத்துவா் ராஜ் பிரசன்னா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆகியோா் திங்கள்கிழமையும் (செப். 10), தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் தலைவரும், முன்னாள் ஆளுநா் வித்யாசாகா் ராவின் செயலருமான ரமேஷ் சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சை நிபுணா் சாய் சதீஷ், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் விக்னேஷ், ரவிவா்மா ஆகியோா் செவ்வாய்க்கிழமையும் (செப். 11) அப்பல்லோ மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணா் பாபு கே ஆப்ரகாம், தீவிர சிகிச்சை பிரிவு தொழில் நுட்ப அலுவலா் மதிவாணன் ஆகியோா் புதன்கிழமையும் (செப். 12) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT