தமிழ்நாடு

ஆறு  மாத பரோல் கேட்டு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் நளினி: உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமா? 

DIN

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆறு  மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களது மகளான ஆரித்ரா  லண்டனில் வசித்து வருகிறார். தற்போது இவருக்கு திருமண ஏற்பாடுகள்  நடந்து வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு  மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை  செய்யும் விவகாரத்தில், முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டு, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தது.

இந்நிலையில் ஆறு  மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த மனுவை நளினி வாபஸ் பெற்றுள்ளார். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்த்து இந்த முடிவினை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT