தமிழ்நாடு

சாஸ்த்ராவில் வளாக நேர்காணல் மூலம் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு

DIN


தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 10 நாள்களாக நடைபெற்ற வளாகப் பணி நியமனத் தேர்வில் 1,400 பேர் வேலைவாய்ப்புப் பெற்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன் தெரிவித்திருப்பது:
இப்பல்கலைக்கழகத்தில் 10 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற வளாகப் பணி நியமனத் தேர்வுத் திருவிழா செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இதில், முன்னணியில் உள்ள காக்னிசன்ட், இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ ஆகிய 4 மென்பொருள் தொழிலகங்கள் நேர்காணல் நடத்தி இளைஞர்களைத் தேர்வு செய்தன. இதில், டி.சி.எஸ். நிறுவனம் அதிக அளவில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது. இத்தேர்வில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கெனவே, பேபால், சிமென்டீ, சைப்ரஸ், மைக்ரோசாப்ட், úஸாஹோ, ப்ரிஸ்வொர்க்ஸ், ராக்வெல் காலின்ஸ், டாடா கம்யூனிகேசன்ஸ், பஜாஜ், டி.வி.எஸ். மோட்டார் மற்றும் பிற தொழிலகங்கள் 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கின.
நிகழாண்டு வளாக நியமன தேர்வு மூலமாக ஒட்டுமொத்தமாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இது, கடந்த ஆண்டை விட அதிகம்.
திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 20 சதவீதத்தை இப்பல்கலைக்கழகம் ஒதுக்கி இருக்கிறது. இத்தேர்வில் 260-க்கும் அதிகமான உள்ளூர் மாணவ, மாணவிகள் பணி நியமனம் பெற்றனர். இவர்களில் எஸ். அனுஸ்ரீ என்ற தகவல் தொழில்நுட்பம் பயின்ற மாணவிக்கு இன்போசிஸ், விப்ரோ என இரு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கின.
இதன் மூலம் கீழ்நிலை, நடுத்தர நிலையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களின் சமூக அந்தஸ்து உயர்கிறது. இவர்களுக்குக் கல்வி வழங்குவதில் சாஸ்த்ரா மகிழ்ச்சி அடைகிறது. இலவசக் கல்வி, உடல் நலம் பேணல், மருத்துவ வசதிகளையும் சாஸ்த்ரா அளிப்பது குறிப்பிடத்தக்கது. சமூகத் தொண்டில் அக்கறை காட்டவும் தவறுவதில்லை என சேதுராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

SCROLL FOR NEXT