தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி: ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு

DIN

அதிமுக சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த மனு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது,  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்ய கோரி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 3 வாரங்களில் பதில்தர வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

மேலும்,  கே.சி.பழனிசாமியின் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்ட தில்லி உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவில் இருந்தவர்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT