தமிழ்நாடு

மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN


சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேணடும்.

உடனடியாக தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை வழங்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும் ரயில்வே துறைக்கும் உத்தரவிடுமாறு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காற்றாலை மின் உற்பத்தி செப்டம்பர் மாதத்தோடு முடிவடைவதால், மின் உற்பத்தி பாதிக்கும் என்றும், மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி  மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது என்றும், உடனடியாக நிலக்கரி வழங்காவிட்டால் தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT