தமிழ்நாடு

மருத்துவமனை அஜாக்ரதையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.58 லட்சம் இழப்பீடு

DIN


சென்னை: தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர், மருத்துவர்களின் அஜாக்ரதையால் மரணமடைந்த சம்பவத்தில், அவரது குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை இழப்பீடாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், உயிரிழந்த அபானி குமார் பதி (29)யின் குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.57.65 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த குமார் பதி, மருத்துவர்களில் அலட்சியத்தால் உயிரிழக்கவில்லை என்பதை நிரூபிக்க மருத்துவமனை நிர்வாகம் தவறிவிட்டதால், நுகர்வோர் தீர்ப்பாயம் இந்த தீர்ப்பை வழங்கியது.

2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட போது, அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகு, அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.

இதை எதிர்த்து அவரது பெற்றோர் தாக்கல் செய்த வழக்கில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT