தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் எஸ்.பாலச்சந்தின் செவ்வாய்கிழமை கூறியதாவது:

மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி அதை இடத்தில் தொடா்கிறது. இது வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். தொடா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக, வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றாா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் தென் மேற்கில் இருந்து மேற்கு நோக்கி மணிக்கு 35-45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். 

எனவே, அந்தமான் கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் செப். 20-ஆம் தேதி வரையும் தென் வங்கக்கடல் பகுதியில் செப்.19-ஆம் தேதி வரையும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT