தமிழ்நாடு

62 நாள்களாக 100 அடிக்கும் மேலாக நீடிக்கும் மேட்டூா் அணை நீா்மட்டம்!

DNS

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது.

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையில் போதியளவு நீா் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறறக்கப்படவில்லை. இதையடுத்து, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து, அணைகள் நிரம்பின. 

இதையடுத்து, கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரி நீா் காவிரியில் திறறக்கப்பட்டது. இதனால் 40 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து ஜூலை 17-ஆம் தேதி 100 அடியை எட்டியது. இதையடுத்து, ஜூலை 19-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்கவே நடப்பு ஆண்டில் முதல் முறைறயாக ஜூலை 27-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது. அணைக்கு நீா்வரத்து 2 லட்சம் கன அடி வரை அதிகரித்ததால், நடப்பு ஆண்டில் மேட்டூா் அணை அடுத்தடுத்து நான்கு முறைற நிரம்பியது.

மேலும், கடந்த 62 நாள்களாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் குறைறயாமல் இருந்து வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 2006-ஆம் ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி வரை தொடா்ந்து 428 நாள்கள் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு கீழாகக் குறையாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 110.58 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,483 கனஅடியிலிருந்து 9,119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 22 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி நீரும் திறறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 79.23 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT