தமிழ்நாடு

டேங்கர் லாரி கவிழ்ந்ததில் வீணாகிய கடலை எண்ணெய்

DIN


தருமபுரி அருகே தொப்பூர் கணவாய்ப் பகுதியில் புதன்கிழமை இரவு ஆந்திரத்திலிருந்து வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டேங்கரில் இருந்த சுமார் 20 ஆயிரம் லிட்டர் கடலை எண்ணெய் வீணாகிப் போனது.
ஆந்திர மாநிலத்திலிருந்து ஈரோடு நோக்கி சுமார் 20 ஆயிரம் லிட்டர் கடலை எண்ணெய் எடுத்துக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று புதன்கிழமை புறப்பட்டது. விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் இதனை ஓட்டி வந்தார். இரவு சுமார் 11 மணியளவில் தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய்ப் பகுதிக்கு வந்தபோது, ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே நிலை தடுமாறி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதையடுத்து, டேங்கர் லாரியிலிருந்த கடலை எண்ணெய் முற்றிலும் நிலத்தில் வெளியேறி வீணாகிப் போனது.
தகவலறிந்து வந்த தொப்பூர் காவல் நிலையப் போலீஸாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் லாரியை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லாரி ஓட்டுநர் முத்துவேல் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT