தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சந்தித்தார்.

கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோயில் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை இறுதிப்போருக்கு முக்கிய காரணமாக விளங்கிய காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கக் கூடாது.

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றேன். மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்தேன். நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதல்வரரிடம் கோரிக்கை வைத்தேன். பாரத் ஆயுஷ்மான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT