தமிழ்நாடு

தமிழக அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும்: கருணாஸ் கைது விவகாரத்தில் விஜயகாந்த் கருத்து  

DIN

சென்னை: தமிழக அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கைது விவகாரத்தில் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து  அவதூறாகப் பேசிய வழக்கில் திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் ஞாயிறு காலை கைது செய்யப்பட்டார். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் தமிழக அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கைது விவகாரத்தில் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-


நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக இருக்கவேண்டும்.  தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது! 

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT