தமிழ்நாடு

மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

DIN

மதுரை 293-வது ஆதினமாக செயல்பட கீழமை நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை ஆதீனம் நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் நித்தியானந்தரை ஒரு தரப்பாகச் சேர்க்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இவருக்கு பின் அடுத்த 293-வது ஆதீனமாக கடந்த 2012-இல் அருணகிரிநாதரால், நித்யானந்தர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மதுரை ஆதீன பொறுப்பில் இருந்து நித்தியானந்தரை அருணகிரிநாதர் நீக்கினார்.

மேலும் மதுரை ஆதீனமாக நித்யானந்தர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த நியமனத்துக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நித்யானந்தர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, நித்தியானந்தருக்கு எதிராக வழக்கு தொடர அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதையடுத்து மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் விதித்த தடை ரத்து செய்யப்படுகிறது. 

எனவே, மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT