தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

DIN

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்தது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்தனர்.
சீரான நீர்வரத்து ஏற்பட்ட பிறகே  சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - வழக்கு

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT