முகப்பு
தமிழ்நாடு

வேலூரில் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது!

வேலூரில் தனியார் கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட கட்டுக் கட்டான பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:32 AM
duraimurugan it raid
பகிர்:


வேலூரில் தனியார் கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட கட்டுக் கட்டான பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வேலூரில் கல்புதூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது வளாகத்தில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாகவும், வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு சென்ற போது பணத்தை பிடித்ததாகவும், கடந்த 29 மற்றும் 30 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும் திமுகவின் அந்த பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரில் தொடர்ந்து திமுகவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது.

2 நாட்களுக்கு முன் துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்த நிலையில் அவரது நண்பரின் வீட்டில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →