தமிழ்நாடு

புதனன்று தமிழகத்தில் 9 இடங்களில் 'செஞ்சுரி' போட்ட வெயில் 

DIN

சென்னை: புதன்கிழமையன்று தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் கொடுமை இந்த அளவுக்கு அதிகமாகஇருக்கிறது.

இந்நிலையில் புதன்கிழமையன்று தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதனன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சேலம், கரூர், பரமத்தியில் தலா 104 டிகிரி , திருச்சி, தருமபுரியில் தலா 102 டிகிரி, வேலூர், மதுரை தலா  101 டிகிரி மற்றும் நாமக்கல், பாளையங்கோட்டையில் தலா  100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT