தமிழ்நாடு

சேலம் பசுமை வழிச் சாலை திட்டம்: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் மக்கள்

DIN

சேலம்: சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்தியதும் செல்லாது என்று தீர்ப்பளித்து, நிலம் கையகப்படுத்த 2018ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சேலம் பசுமை வழித் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த விவசாயிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை ஏராளமான கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT