தமிழ்நாடு

இஸ்லாமிய பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்: தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம் 

DIN

சென்னை: சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது.வியாழன் இரவு அமைந்தகரை மார்கெட் பின்புறம் உள்ள பகுதியில்  அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தெஹலான் பாகவிக்கு இஸ்லாமிய பெண்கள் வாக்கு சேகரித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த  பரமசிவம் மற்றும் அவரது ஆட்கள் பெண்களை ஆபாசமாகத் திட்டி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.தாக்குதலில் காயப்பட்ட பெண்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட அமைந்தகரை பகுதியில் #AMMK கூட்டணி வேட்பாளர் தெஹலான் பாகவிக்கு வாக்கு சேகரித்த இஸ்லாமிய பெண்கள் மீது பரமசிவம் தலைமையிலான திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.#DMK குண்டர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT