தமிழ்நாடு

திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஊர்: மு.க. ஸ்டாலின் தகவல்

திருச்சி திமுகவின் எஃகுக் கோட்டை. திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஊர் திருச்சி என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

DIN


திருச்சி: திருச்சி திமுகவின் எஃகுக் கோட்டை. திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஊர் திருச்சி என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் எஃகுக் கோட்டை திருச்சி. கருணாநிதிக்கு அதிகமாக பிடித்த ஊர் திருச்சிதான் என்று கூறினார்.

மேலும், திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்துள்ளது. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT