தமிழ்நாடு

தேனியில் மிகப் பிரம்மாண்டப் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடிக்கு மீனாட்சியம்மன் சிலை பரிசளிப்பு

தேனி மாவட்டம் கரிசல்பட்டிவிளக்குப் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

DIN

தேனி மாவட்டம் கரிசல்பட்டிவிளக்குப் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் மோடிக்கு, ஓ. பன்னீர்செல்வம் மீனாட்சியம்மன் சிலையை பரிசளித்தார். 

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக கரிசல்பட்டிவிளக்குப் பகுதியில் பிரம்மாண்டப் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தேசத்தின் காவலர் பிரதமர் மோடி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் பிரேமலதா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தேனி மற்றும் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரவே தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT