தமிழ்நாடு

முதல்வர்,தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

DIN

முன்னாள் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 முதல்வர், துணை முதல்வர்: அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 முன்னாள் எம்.பி.யும், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமான ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தோம். அதிமுக தலைமையின் மீது மிகுந்த விசுவாசத்துடன் பணியாற்றி வந்த அவரை, இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
 மு.க.ஸ்டாலின் (திமுக): ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ் இளம் வயதில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கருணாநிதியிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய ஜே.கே. ரித்தீஷ் திமுகவில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்னைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அவர் கூறியுள்ளார்.
 திரையுலகத்தினர் இரங்கல்: நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மறைவுக்கு நடிகர் விஷால், நடிகை குஷ்பூ, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாழ்க்கை யூகிக்க முடியாதது. என்னுடைய நெருங்கிய நல்ல நண்பர் ஜே. கே. ரித்தீஷ் மரணமடைந்தார் என்ற செய்தி நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஷால்.
 ஜே.கே.ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட திரையுலகினர் ரித்தீஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரை அமைப்புகள் ஜே.கே.ரித்தீஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT