தமிழ்நாடு

மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டம்: திமுக 'பகீர்' புகார் 

மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

DIN

சென்னை: மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளது

இந்நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் நேரிடையாக அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் குறிப்பிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. 

அதற்கு ஏற்ற வகையில் அங்கு செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்யய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பை குறைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

எனவே தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT