தமிழ்நாடு

குமரி அருகே பாஜக - அமமுக தொண்டர்கள் மோதல்: 5 பேருக்கு கத்திக்குத்து 

DIN

நாகர்கோயில்: கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 278 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன,.

இந்நிலையில் கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தின் பூதப்பாண்டி அருகேயுள்ள வீரவநல்லூர் என்னும் இடத்தில வியாழன் மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், வெளியே கூடியிருந்த பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே வாய்ச்சண்டை உருவானது. விரைவில் அது கைகலப்பாக மாறியது.

இதில் அமமுகவைச் சேர்ந்தவர்கள் கத்தி மற்றும் இரும்புக்கம்பியால் பாஜக தொண்டர்களைத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் ஆபத்தான கட்டத்திலிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT