தமிழ்நாடு

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திடீர் மழை: பேரருவியில் தண்ணீர்

DIN

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த திடீர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. 
இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் இப்பகுதிகளில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. இதனையடுத்து, தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT