தமிழ்நாடு

தமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு பரிந்துரை 

தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு , இந்திய தேர்தல் ஆணையத்திற்கு , தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரை செய்துள்ளார்.

DIN

சென்னை: தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு , இந்திய தேர்தல் ஆணையத்திற்கு , தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் வேலூர் நீங்கலாக உள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள்  கடந்த 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழகத்து தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாஹு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரை செய்துள்ளார்.

அவர் தனது பரிந்துரையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குப் பதிவு மையங்கள், பூந்தமல்லியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையம் மற்றும் கடலூரில் ஒரு மையம் என மொத்தம் பத்து வாக்குப்பதிவுமையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற பரிந்துரைத்துளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம்தான் இறுதிமுடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT