சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர் நீங்கaலான 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தற்போது மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19-அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதையடுத்து இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த டிடிவி, சமீபத்தில் அமமுகவை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்துள்ளார்.
அதேசமயம் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தங்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் செவ்வாயன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டிடிவி தினகரன் சார்பில் மனுவை தாக்கல்செய்துள்ள வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவை தனது மனுவை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது தேர்தல் களத்தில் அக்கட்சிக்கு பெரிதும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.