போக்ஸோ சட்டத்தில் சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை
சிறார் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான போக்ஸோ சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
சென்னை: சிறார் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான போக்ஸோ சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
போக்ஸோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கூறியதாவது:
போக்ஸோ சட்ட விதிகளின்படி 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் / சிறுமியர் மீது நிகழ்த்தப்பபடும் பாலியல் குற்றங்களுக்கு தணடனைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆனால் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்தோடு கொள்ளும் பாலியல் உறவானது குற்றமாக கருதப்படாது என்று போக்ஸோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.