தமிழ்நாடு

கோவையில் கடன் விவகாரம் தொடர்பாக விவசாயி ஒருவர் வங்கி முன்பு தற்கொலை

கோவை அருகேயுள்ள சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

DIN

கோவை: கோவை அருகேயுள்ள சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பால்பண்ணை அமைப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு, கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் பெற்றார்.

ஆனால் தற்போது இந்த கடன் தொடர்பாக பூபதியிடம் பேசிய வாங்கி அதிகாரிகள் நண்பர்கள் இருவரின் கடனையும் பூபதியே செலுத்த வேண்டும் என்று கூறி அழுத்தம் குடுத்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக பூபதி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக வியாழனன்று பூபதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT