தமிழ்நாடு

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடியில் கைது?

தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தி. இன்பராஜ்

தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் காயும் தனது குடும்பத்தினருடன் கடந்த 2015 ஆண்டு படகில் சென்றபோது கொலை செய்ய முயன்றதாக அப்போதைய துணை அதிபர் அகமது அதிப்பை மாலத்தீவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

அவருக்கான மேல்முறையீட்டின் அடிப்படையில் தண்டனை காலத்தை 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் அவர் சிறையில் இருந்த நிலையில், மாலத்தீவு உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து அண்மையில் உத்தரவிட்டது. கடந்த மே மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் திடீரென தலைமறைவானார் . 

இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ஒரு சிறிய ரக கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடியில் உள்ள மத்திய,  மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசார் தூத்துக்குடி துறைமுகம் அருகே 100 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த ஒரு சிறிய ரக கப்பல் கப்பலில் வியாழக்கிழமை திடீரென சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT