தமிழ்நாடு

ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்றுதான் வந்தேன்: அத்திவரதர் தரிசனத்திற்குப் பின் வேலூர் திமுக வேட்பாளர் பேட்டி  

DIN

காஞ்சிபுரம்: ஏன் நாமும் கலந்துகொள்ளக் கூடாது என்றுதான் வந்தேன் என்று அத்திவரதர் தரிசனத்திற்குப் பின் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த பேட்டியளித்துள்ளார்.  

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை  மாலை 6 மணியுடன் முடிந்தது. இதையடுத்து வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஞாயிறன்று  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் திமுக ஆன்மிகப் பாதையில் செல்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து கதிர் ஆனந்த் கூறியதாவது:

அதுபோல எல்லாம் எதுவும் இல்லை. நீங்கள்தான் அந்த விஷயத்திற்கு ஆபரண அலங்காரம் செய்கிறீர்கள். நான் சாதாரணமாகத்தான் இங்கு வந்தேன். காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. அதைப் பார்க்க நானும் வந்துள்ளேன்.  மக்கள் கூடக் கூடிய இந்த இடத்தில் என்ன செய்கிறார்கள்? எப்படி இந்த விழா நடைபெறுகிறது? இதில் ஏன் நாமும் கலந்துகொள்ளக் கூடாது? என்றுதான் வந்தேன்.

இதில் திமுக ஆன்மிகப் பாதையில் செல்கிறது என்பதெல்லாம் கிடையவே கிடையாது. நாங்கள் எப்போதும் செல்லும் பாதையில்தான் இருக்கிறோம்.

இவ்வாறுஅவர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT