தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரம்:  திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதன் தொடர்ச்சியாக செவ்வாயன்று மக்களவையிலும் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன   

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த உள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

மருத்துவமனையிலிருந்து ஷூப்மன் கில் டிஸ்சார்ஜ்!

பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

சிலியில் அதிபர் தேர்தல்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT