தமிழ்நாடு

ஊருக்குப் போறீங்களா? 30 நிமிடம் முன்னதாக சென்டிரல் வரவும்: காவல்துறை அறிவிப்பு

DIN


சென்னை: விரைவு ரயில்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் கூறியிருப்பதாவது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளும், பயணிகளும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, பயணிகள் தங்களது ரயில் புறப்பட அரை மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்தால்தான் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு தங்களது ரயிலைப் பிடிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT