தமிழ்நாடு

எடப்பாடி புது ஏரியில் தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்த முதல்வர்

DIN


 எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி அருகில் உள்ள புது ஏரியைப் பார்வையிட்ட முதல்வர், அங்கு சீரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
எடப்பாடி தொகுதிக்குள்பட்ட நங்கவள்ளியில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் வரவேற்றார். முதல்வர் எடப்பாடி கே . பழனிசாமி பங்கேற்றுத் திட்டத்தைத் தொடக்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றார்.
தொடர்ந்து எடப்பாடி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர்,  பாலமலையில் 11 குக்கிராமங்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.  அப்போது அவர் பேசியதாவது: மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நீர் நிரப்பிட திட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட நிதியும் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் உபரிநீரைச் சேகரிப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி அருகில் உள்ள புது ஏரியைப் பார்வையிட்ட முதல்வர், அங்கு சீரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
நங்கவள்ளியில் 1,019 மனுக்களையும்,  எடப்பாடியில் 1,331 மனுக்களையும், கொங்கணாபுரத்தில் 1,712 மனுக்களையும் முதல்வர் நேரில் பெற்றார். அவற்றில் தகுதியுடைய 53 பேருக்கு உடனடியாக, அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில்,  அரசு தலைமைச் செயலாளர் க. சண்முகம்,  கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா,  தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி ,  வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா,  சட்டப்பேரவைத் தொகுதி  உறுப்பினர்கள் செம்மலை,  ராஜா, வேல்முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT