தமிழ்நாடு

தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

DIN


ஆசிய தடகள ஓட்டப் பந்தயப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.
தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 4 ல 400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வழுதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அவருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடிக் கொடுத்ததற்காக அவருக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT