தமிழ்நாடு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு

DIN


தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.trb.tn.nic என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இடைநிலை,  பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (தாள் 1,  தாள் 2) கடந்த ஜூன் 8,  9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.  

இந்தத் தேர்வை மொத்தமாக 5.88 லட்சம் பேர் எழுதினர்.  முதல் தாள் தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.

இதையடுத்து தேர்வுகளுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Key Answers)  பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு www.trb.tn.nic  என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT