தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6 பேர் நீதிபதிகளாக நியமனம்

DIN


சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்து வந்த நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகிய 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  


கடந்த 2017-ஆம் ஆண்டு  நவம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர்  உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 6 பேரும் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 75 .  தற்போது  தலைமை நீதிபதி உள்பட 58 பேர் நீதிபதிகளாக உள்ளனர். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இந்த  இடங்களுக்கு  மாவட்ட நீதிபதிகள் தரப்பில் இருந்தும், வழக்குரைஞர்கள் தரப்பில் இருந்தும் நீதிபதிகள்  தேர்வு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT