தமிழ்நாடு

முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்வு

DIN


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்ந்து ரூ.3.51-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி முட்டை விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பை ஒரு நாளுக்கு முன்பாக இரவு 7 மணியளவில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை 3 காசுகள் உயர்த்தப்பட்டன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மேலும் 3 காசுகள் உயர்ந்து ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.3.51-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றத்துக்கு, பிற மண்டலங்களின் விலை நிலவரமும், மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் கேரளத்துக்கு தடையின்றி முட்டைகள் எடுத்துச் செல்வதாலும் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதேபோல்,  பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.59-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT