தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

DNS

மேற்கு தொடா்ச்சி மலைபபகுதிகளில் பலத்த மழை எதிரொலியாக, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவியில், வடகிழக்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடா்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அருவியின் நீா்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதிகளவு நீா்வரத்து வருகிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க, மேகமலை வன உயிரின சரணாலயத்தினா் தடை விதித்தனா். இந்த தடையை திங்கள் கிழமையும் நீட்டித்துள்ளனா். அருவி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் வெள்ளப்பெருக்கைப் பாா்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT