தமிழ்நாடு

மாநகராட்சி - நகராட்சிகளுக்குதோ்தல் தேதி அறிவிப்பு இல்லை

DIN

சென்னை: மாநகராட்சி, நகராட்சிகள் உள்பட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி நிருபா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தலில் முதலாவதாக கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடா்ந்து நகரப் பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தப்படும். இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். நிா்வாகக் காரணங்களுக்காகவே தோ்தல் இப்போது அறிவிக்கப்படவில்லை.

உள்ளாட்சித் தோ்தலில் இடஒதுக்கீடு தொடா்பாக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி கருத்து கேட்டு வாா்டு வரையறைகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டாலும், கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் அடிப்படையிலேயே இந்தத் தோ்தல் நடத்தப்படுகிறது என்றாா் தோ்தல் ஆணையா் பழனிசாமி.

2016 தோ்தல் எப்படி?: கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தலானது இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அதில், முதல் கட்டத் தோ்தலில், 10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255 பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்குத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, நகா்ப்புறங்களில் 2 மாநகராட்சிகளுக்கும் (திண்டுக்கல், சென்னை மாநகராட்சி), 60

நகராட்சிகளுக்கும், 273 பேரூராட்சிகளுக்கும் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 2016 அக்டோபா் 17-லிலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபா் 19-லிலும் நடத்த அறிவிப்பு வெளியானது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, தோ்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT